மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளராகப் பணியாற்றிவருபவர் இளவரசன். இவர் ஒப்பந்ததாரர்களிடம் டெண்டர் ஒதுக்குவதற்கும், தவறான கணக்கு ரசீதுகளை ஏற்றுக் கொள்வதற்கும் கையூட்டு கேட்பதாகத் தொடர்ந்து புகார்கள் வந்தன.
இந்நிலையில், மணிகண்டன் என்ற ஒப்பந்ததாரர் நெடுஞ்சாலை டெண்டர் தொடர்பாக கொடுத்த ரசீதுகளை ஏற்றுக்கொள்வதற்கு 10 லட்ச ரூபாயை இளவரசன் கையூட்டாகப் பெற்றதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இது தொடர்பாக ஒப்பந்ததாரர் மணிகண்டனிடம் மேற்கொண்ட விசாரணையில் ஓவு ரெட்டி, அவரது மகன் சரவணக்குமார் மூலமாக பொறியாளர் இளவரசன் கையூட்டைப் பெற்றுக்கொண்டது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, பொறியாளர் இளவரசன், ஒப்பந்ததாரர் மணிகண்டன், இடைத்தரகர்களாகச் செயல்பட்ட இருவர் என நான்கு பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.