புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் குயிலாப்பாளையம் பகுதியில் வசித்தவர் சுந்தரமூர்த்தி. இவருக்கு மகேஷ்வரி என்ற மனைவியும் கிருத்திகா (17), சமிக்ஷா (12) என்ற இரு மகள்களும் இருந்தனர். இவரும் இவரது மனைவியும் ஆரோவில் பவுண்டேஷனில் பணிபுரிந்தனர்.
இந்தச்சூழலில் திங்கட்கிழமை சுந்தரமூர்த்தியிடம் ஃபோனில் பேசிய உறவினர்கள், நேற்று அவரை மீண்டும் தொடர்புகொள்ள முயற்சித்தபோது அவர்களால் தொடர்புகொள்ள இயலவில்லை. இதனால் சந்தேகமடைந்து, நேற்று நேரில் வந்து பார்த்தனர். அப்போது சுந்தரமூர்த்தி, அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் என நான்கு பேரும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து ஆரோவில் காவல் நிலையத்திற்கு தகவலளித்த பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், தீபாவளிக்கு சீட்டு நடத்தி கடனில் சிக்கியதால் சுந்தரமூர்த்தி மற்றும் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: பேரம் பேசுவது போல் நடித்து செல்ஃபோன் திருட்டு; சிசிடிவி உதவியோடு போலீஸ் விசாரணை!