இராமேஸ்வரம் நகர, கோயில்களை சுற்றியுள்ள பகுதிகளில் பாதாளச் சாக்கடை திட்டம், தொலைத்தொடர்பு பணிகளுக்காக குழிகள் தொண்டப்பட்டு பின்னர் மூடப்பட்டன.
இருப்பினும், சாலைகள் இன்னும் சீர்ப்படுத்தப்படவில்லை. இதனால் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன. இச்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், சுற்றுலாப் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.
சாலைகளை சீர்செய்யாத நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளர் நலச் சங்கத்தினர் இன்று (நவ.3) நகராட்சி அலுவலகம் முன்பு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கைகளில் பழைய டயர்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் நகராட்சியின் மெத்தனப் போக்கை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.