சென்னையில் கரோனா தொற்று பரவலால் நாள்தோறும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனை தடுக்க மாநகராட்சி முகக் கவசம் வழங்குதல், கபசுரக் குடிநீர் வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைத்து மண்டலங்களிலும் மருத்துவ முகாம் அமைத்து மக்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.
அதன்படி, இன்று (ஜூலை 1) மட்டும் 535 மருத்துவ முகாம்கள் 15 மண்டலங்களில் நடைபெற்றன. அதிகபட்சமாக அண்ணாநகரில் 64 மருத்துவ முகாம்களும் அடுத்தப்படியாக திருவிக நகரில் 58 மருத்துவ முகாம்களும் நடைபெற்றன. இந்த 535 மருத்துவ முகாம்களில் மொத்தம் 36 ஆயிரத்து 518 பேருக்கு பரிசோதிக்கப்பட்டன. அதில் 2381 நபர்களுக்கு சிறு அறிகுறி இருந்ததால் அவர்களை கரோனா பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மீதம் உள்ளவர்களுக்கு நோய்க்கு ஏற்ப மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. மேலும், மே 8ஆம் தேதி முதல் ஜூலை 1ஆம் தேதி வரை மொத்தம் சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் சேர்த்து 10 ஆயிரத்து 862 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளதாகவும், அதில் 7 லட்சத்து 10 ஆயிரத்து 630 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்ட உள்ளது எனவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மேலும், நோய் பரவல் அதிகமாக சென்னையில் பரவி வருவதால் பாரத் ஸ்டேட் வங்கி சார்பில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான 5 ஆயிரம் கைகழுவும் திரவங்கள், 5 ஆயிரம் முகக் கவசங்கள், 5 ஆயிரம் கையுறைகள் ஆகியவற்றை மாநகராட்சி ஆணையரிடம் இன்று பாரத் ஸ்டேட் வங்கியின் பொது மேலாளர் சங்கர் ஒப்படைத்தார்.
இதையும் படிங்க: ஈரான் வாயு கசிந்து தீ பற்றி எரிந்ததில் 19 பேர் உடல் கருகி உயிரிழப்பு!