ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.65 கோடி போதைப் பொருள்கள் பறிமுதல்! - சென்னை விமான நிலையத்தில் போதைப் பொருள்கள் பறிமுதல்

சென்னை: நெதர்லாந்து, பெல்ஜியம் நாடுகளிலிருந்து மருத்துவ பொருள்கள் என்று இந்தியாவிற்கு கடத்தப்பட்ட ரூ.1.65 கோடி மதிப்புடைய போதைப் பொருள்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.

1.65 crore worth of drugs seized at Chennai airport

author img

By

Published : Aug 13, 2020, 7:40 AM IST

துபாயில் இருந்து சரக்கு விமானம் ஒன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. இதில் வந்த பார்சல்களை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்தனர்.

அதில் நெதர்லாந்து, பெல்ஜியம் நாடுகளிலிருந்து துபாய் வழியாகச் சென்னைக்கு வந்திருந்த 4 பார்சல்களும் இருந்தன. அந்தப் பார்சல்களில் பதப்படுத்தப்பட்ட பழங்கள், உணவு, மருத்துவ பொருள்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால், அலுவலர்களுக்கு அந்தப் பார்சல்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்தப் பார்சல்களில் இருந்த செல்போன் எண்களை தொடர்பு கொண்டனர்.

அந்த எண்கள் உபயோகத்தில் இல்லை என்று வந்தது. அதில், நெதர்லாந்து நாட்டிலிருந்து வந்திருந்த 2 பார்சல்களில் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் முகவரியும், பெல்ஜியத்திலிருந்து வந்திருந்த 2 பார்சல்களில் ஆந்திர மாநிலம் முகவரியும் இருந்தன.

இதைத் தொடர்ந்து, சுங்கத்துறையினா் அந்த நான்கு பார்சல்களையும் உடைத்து பார்த்தனர். அப்போது போதை மாத்திரைகள், போதைப்பவுடர் பெருமளவு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

வெளிநாடுகளில் பயன்படுத்தக்கூடிய விலை உயர்ந்த எக்ஸ்டஸி என்ற போதை மாத்திரைகள் ஐந்து ஆயிரத்து 210ம், மெத் பவுடர் எனப்படும் போதை பவுடா் 100 கிராமும் இருந்தது.‌

இந்தப் போதை மாத்திரைகள், போதை பவுடரின் மொத்த மதிப்பு ரூ.1.65 கோடி எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, சுங்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து போதை பொருள்களை பறிமுதல் செய்தனா்.

அதோடு சுங்கத்துறையின் தனிப்படையினர் காஞ்சிபுரம், ஆந்திராவுக்கு சென்றனர். அப்போது, காஞ்சிபுரம் முகவரி போலியானது என்று தெரியவந்தது.

ஆனால், ஆந்திரா முகவரியில் இளைஞா் ஒருவா் சிக்கினார். அவரை கைது செய்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், ஆந்திராவில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி பிணையில் வெளியே வந்துள்ளவர் என்பது தெரியவந்தது.

இதேபோல், வெளிநாடுகளிலிருந்து ரகசியமாக போதை பொருள்களை இறக்குமதி செய்து, இங்குள்ள மாணவா்கள், இளைஞா்களுக்கு ரகசியமாக விற்பனை செய்துவருகின்றனா்.

இந்த போதை மாத்திரை ஒன்றின் விலை ஐந்தாயிரம் என்று கூறப்படுகிறது. இதனால் வசதியான மாணவா்கள், செல்வந்தா்கள் தான் இதை விலை கொடுத்து வாங்குவதாவும் தெரிகிறது.

இது தொடர்பாக சுங்கத்துறையினா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காஞ்சிபுரத்தில் போலி முகவரி கொடுத்து தலைமறைவான நபரையும் தேடி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.