ETV Bharat / state

இளைஞர் நடத்துநருடன் தகராறு - பொதுமக்கள் இளைஞருக்கு தர்ம அடி! - tamil news

திருப்பூர்: அரசுப் பேருந்து நடத்துநருடன் தகராறில் ஈடுபட்ட இளைஞரை பொதுமக்கள் அடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

தகராறு
தகராறு
author img

By

Published : Feb 24, 2020, 2:54 PM IST

திருப்பூர், பழைய பேருந்து நிலையத்திலிருந்து பல்லடம் நோக்கி சென்ற அரசுப்பேருந்தில் ஏறிய இளைஞர் ஒருவர், பெண்கள் வரிசையில் நின்று கொண்டு பயணம் செய்துள்ளார். இதைப் பார்த்த பேருந்தின் நடத்துநர் பின்னால் சென்று நிற்க அறிவுரை கூறியுள்ளார். ஆனால், அந்த இளைஞர் நடத்துநரின் பேச்சைக் கேட்காமல் அதே இடத்தில் நின்றுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் சண்டையாக மாறியுள்ளது.

அப்போது, பேருந்தில் பயணித்த சக பயணிகள் நடத்துநருக்கு ஆதரவாக அந்த இளைஞரைப் பிடித்து அடித்துள்ளனர். மேலும், பேருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செல்லும் போது, வாசலில் பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்களிடம் பிடித்துக் கொடுத்தனர்

பொதுமக்கள் இளைஞருக்கு தர்மஅடி

இதுதொடர்பாக வீரபாண்டி காவல் துறையினர் அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கண்டெய்னர் லாரியில் மோதி பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.