திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி, தற்போது பள்ளிகள் திறக்கப்படாததால் வீட்டின் அருகேயுள்ள தையல் பயிற்சி பள்ளிக்குச் சென்று வந்தார்.
அங்கு முகமது மைதீன் என்ற இளைஞருடன் மாணவிக்கு காதல் ஏற்பட்டுள்ளது. வீட்டுக்குத் தெரியாமல் இருவரும் காதலித்து வந்த நிலையில், மாணவியை திருமணம் செய்வதாகக் கூறி, முகமது மைதீன் தனது வீட்டுக்கு அழைத்து வந்து, மாணவியை பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த மாணவியின் தாயார், திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் முகமது மைதீன் மீது புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இளைஞரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட மாணவியை, காவல்துறையினர் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.