ETV Bharat / state

8 ஆண்டுகள் கழிப்பறையின்றி பெண்கள் சிரமம் - தற்போதுவரை கோரிக்கையோடு வாழும் மக்கள் - பொதுமக்கள் கோரிக்கை

திருப்பூர் : தாராபுரம் பகுதியில் 8 ஆண்டுகளாக கழிப்பறையின்றி பெண்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

கழிப்பறையின்றி பெண்கள் சிரமம்
Public toilet Issue
author img

By

Published : Dec 7, 2020, 10:29 PM IST

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நஞ்சியம்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட குப்பிச்சிபாளையம் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தினசரி கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த 2012ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் சார்பில் பெண்களுக்கென கழிப்பிடம் ஒன்று ஒப்பந்ததாரர் மூலம் கட்டப்பட்டு வந்தது.

ஆனால் அவருக்கு வழங்க வேண்டிய பில் பணம் வழங்கப்படாததால் ஒப்பந்ததாரர் அந்த கட்டடத்தை மூடிவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சுமார் எட்டு ஆண்டுகளாக குழந்தைகள், பெண்கள் இயற்கை உபாதைக்கென அங்குள்ள காடுகளில் பாதுகாப்பின்றி இரவு நேரம் சென்று வருகின்றனர்.

கழிப்பறையின்றி பெண்கள் சிரமம்

ஆனால் பகல் நேரத்தில் இயற்கை உபாதைக்கு செல்ல முடியாமல் தினந்தோறும் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கு அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து அந்த கழிவறை கட்டடத்தை புதுப்பித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர பொதுமக்கள், அப்பகுதி சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சிகு ஓடை கண்மாயில் நீர் நிரப்ப விவசாயிகள் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.