தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் 397 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் நடைபெற்றது.
விழாவில் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம், மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்று 73,77,580 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், ”நாங்கள் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை கொடுத்துள்ளோம். திட்டங்களை சொல்லி வாக்குக் கேட்போம். மக்கள் எங்களுக்கு ஆதரவளிப்பார்கள். இந்த தேர்தலுக்குப் பிறகு திமுக என்ற ஒரு கட்சி இருக்காது. அந்தளவு நாங்கள் திட்டங்களை கொடுத்துள்ளோம் என்றார்.
மேலும் அவரிடம், ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு, ஒரு வாய்ப்பு கொடுத்தால் எப்படி செயல்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறந்த முறையில் செயல்படுகிறார் என்பது அனைவருக்கும் தெரியும்” என்று பதிலளித்தார்.
இதையும் படிங்க: