திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 22ஆம் தேதி மின்தடை ஏற்பட்டதால் ஆக்சிஜன் செலுத்துவதில் இடையூறு ஏற்பட்டு அதன் காரணமாக அடுத்தடுத்து நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மருத்துவர்களின் அலட்சியத்தால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக மருத்துவமனை முற்றுகை போராட்டம் இன்று (செப்.25) நடைபெற்றது.
![முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விசிக](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tpr-01-vckprotest-ghissue-vis-7204381_25092020125140_2509f_00991_300.jpg)
மேலும் இப்போராட்டத்தில் திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணி புரியும் வகையில் ஏற்பாடு செய்து தரவேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: நீட் தேர்வினால் ஏற்பட்ட மரணங்களுக்கு திமுகவே காரணம் - செல்லூர் ராஜு