திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள பொன்னிவாடி ஊராட்சி பகுதியில் பச்சை பாலி விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று (ஆக.30) மதியம் இரண்டு மணி அளவில் முகத்தை மூடிக்கொண்டு வந்த இரண்டு அடையாளம் தெரியாத இருவர் கோயிலின் உண்டியல், பாதுகாப்பு பெட்டி ஆகியவற்றை இரும்பு கடப்பாறை வைத்து உடைக்க முயற்சி செய்தனர்.
அப்போது மக்கள் நடமாட்டம் தென்பட்டதால், இருவரும் தப்பியோடிவிட்டனர். இந்த சம்பவம் கோயிலில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பின்னர் இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகியது. இது குறித்து தாராபுரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வீட்டருகே நிறுத்திவைத்திருந்த இருசக்கர வாகனம் திருட்டு: மூவருக்கு வலைவீச்சு!