திருப்பூர் மாவட்ட ஏஐடியுசி சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அதில், 'நோய்த்தொற்றால் 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என அரசு கூறியுள்ளது.
இந்நிலையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் என்பது ஓய்வூதியர்களுக்குப் பொருந்தாது.
அமைப்புசாரா வாரியத்தின் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு கடந்த 8 மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை' என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஓய்வூதிய விண்ணப்பம் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கல்வி, திருமணம், பிரசவம் உள்ளிட்ட தேவைகளுக்கு நிதியுதவி கேட்டு விண்ணப்பித்த மக்களுக்கும் பணப்பலன்கள் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாகவும் அதில் கூறி உள்ளனர்.
பதிவைப் புதுப்பிக்க மாதக்கணக்கில் காக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், இந்த பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும் என்றும்; இதற்கு தீர்வு காணும் பொருட்டு கண்காணிப்புக் குழுவை கூட்ட வேண்டுமென்றும் ஏஐடியுசி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
'பிரச்னைகளுக்குத் தீர்வு காண கண்காணிப்புக் குழு கூட்டத்தை நடத்துக' - ஏஐடியுசி - ஏஐடியுசி
திருப்பூர்: மாவட்ட நலவாரியத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காண, கண்காணிப்புக் குழுக் கூட்டத்தை நடத்தக்கோரி, ஏஐடியுசி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.