ETV Bharat / state

உடுமலையில் கார் மீது ரயில் மோதி விபத்து!

திருப்பூர்: உடுமலைப்பேட்டை அருகே ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற கார் மீது ரயில் மோதிய விபத்தில், காரில் பயணித்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

விபத்தில் சிக்கிய கார்
author img

By

Published : Apr 13, 2019, 11:40 AM IST

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருந்து மூணார் செல்வதற்காக 5 பேர் காரில் சென்றுள்ளனர். அவர்கள் சென்ற கார் இன்று அதிகாலை உடுமலைப்பேட்டை தளி சாலை மேம்பாலம் வந்தபோது, தவறுதாலாக பாலத்தின் கீழ்ப் பகுதியில் சென்றுள்ளனர்.

அப்பகுதியில் ரயில்வே கிராஸிங் இல்லாதபோதும், அவர்கள் ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயற்சி செய்துள்ளனர். இதனால் அந்தக் கார் தண்டாவாளத்தில் சிக்கிக் கொண்டுள்ளது. பின்னர் அவர்கள் காரை தண்டவாளத்தில் இருந்து அகற்ற முயற்சித்துள்ளனர்.

அச்சமயத்தில் பழனியில் இருந்து பாலக்காடு செல்லும் சரக்கு ரயில் வந்துள்ளது. இதனால் காரில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து காரை விட்டு இறங்கிச் சென்றுள்ளனர். பின்னர் தண்டவாளத்தில் சிக்கிய கார் மீது ரயில் மோதியதில் கார் முற்றிலுமாக சேதமடைந்தது.

இந்த விபத்தில் காரில் பயணித்த அனைவரும் எந்தவிதமான காயங்களும் இன்றி உயிர் பிழைத்தனர்.

Intro:Body:

இன்று காலையில்  உடுமலைப்பேட்டை ரயில்வே  மேம்பாலம் அருகே விபத்து ஏற்பட்டுள்ளது. உடுமலையில் இருந்து மூணார் செல்ல வாகனத்தில்  வந்தவர்கள், அதிகாலை இரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது தண்டாவாளத்தில் வாகனம் சிக்கி பழனியில் இருந்து பாலக்காடு செல்லும் சரக்கு இரயில் மோதியாதல் விபத்திற்கு உள்ளானது. வாகனத்தில் யாரும் இல்லாத காரணத்தால் உயிர் இழப்பு எதுவும் ஏற்படவில்லை

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.