புதிய திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற பணிகள் திறப்பு விழா, கரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருப்பூர் மாவட்டத்திற்கு இன்று (நவ. 6) வருகைதந்தார்.
நலத்திட்ட உதவிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மைத்துறை, மகளிர் திட்டம், கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட 29 துறைகளில் 5 ஆயிரத்து 592 பயனாளிகளுக்கு 66 கோடியே 72 லட்சத்து 75 ஆயிரத்து 822 ருபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளைத் திறந்தும் வைத்தார்.
நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதலமைச்சர், தொழில்கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழு ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதையும் படிங்க...கணிணி ஆசிரியர்கள் 800 பேருக்கு பதவி உயர்வு