தமிழ்நாட்டு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. அனைத்து கட்சியினரும் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டனர். இந்நிலையில், மார்ச் 12ஆம் தேதி முதல் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரும் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவருமான சபாநாயகர் தனபால் அவிநாசியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.