திருப்பூரில் மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று காவல்துறை மூலம் கரோனா வைரஸ் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் அத்தியாவசிய பொருள்கள் கிடைக்கும் இடங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 30 வாகனங்களை இன்று மாநகர காவல் துணை ஆணையர் பத்ரிநாராயணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, திருப்பூரில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் சென்றதற்காக 40 வழக்குகள் பதியப்பட்டு 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருப்பூர் ஊரகப் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் செயல்பட்ட நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.
மாநகர காவல் துறை சார்பில் 30 வாகனங்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளன. இவை பகுதி வாரியாகச் சென்று பொதுமக்களிடம் கரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளன என்றார்.
இதையும் படிங்க... விளைபொருள்களை விற்பனைக்கு சேமித்து வைக்க அரசு செய்துள்ள ஏற்பாடு!