திருப்பூர் மாவட்டத்தில், கரோனா தொற்றின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மாநில அரசும், மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இருப்பினும், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால் மக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 2) புதிதாக 87 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 2 ஆயிரத்து 904ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 58 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 894 பேர் தொற்று பாதிப்பு காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் மொத்த உயிரிழப்பு 69ஆக உள்ளது.
திருப்பூரில் ஒரே நாளில் 87 பேருக்கு கரோனா - கரோனா நோய்தொற்று பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை
திருப்பூர்: மாவட்டத்தில் ஒரே நாளில் 87 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.