இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்றுவரும் சூழ்நிலையில் திருப்பூரில் திமுக அதன் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், டெல்லியைப் போல தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்து முன்னணி திருப்பூரில் புஷ்பா ரவுண்டானா பகுதியில் பள்ளியை ஆக்கிரமித்து பெரிய பந்தல்கள் அமைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாகவும், உலக அளவில் பின்னலாடை வர்த்தகத்தில் சிறந்து விளங்கும் திருப்பூரில் வன்முறைகள் நிகழ்ந்தால் மிகப்பெரிய இழப்புகள் ஏற்படும் என்பதால் முன்கூட்டியே மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் கவனத்தில்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பூரைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடமும் மாநகரக் காவல் ஆணையரிடமும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடத்திலும் மனு அளிப்பதாகத் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் கலந்துகொண்டன.
இதையும் படிங்க: சிஏஏ எதிர்ப்பு: மோடி, ஷா உருவப்படத்தை கிழித்தெறிந்த மாணவர்கள்