திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன் உற்பத்தி நிறுவனங்களில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் இவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.
இந்நிலையில் பிகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேம், ஒடிசா மாநிலங்களுக்கு ரயில்கள் மூலம் பதிவு செய்த வடமாநில தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். மேலும் விண்ணப்பம் கொடுத்து பதிவு செய்யப்பட்ட நிலையில், இதுவரை தங்களுக்கு எந்தவிதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனவும், உடனடியாக தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என திருப்பூர் பாளையக்காடு பகுதியில் தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்திற்கு இடையூறாக இருந்ததால் அப்பகுதி மக்கள், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த திருப்பூர் வடக்கு காவல்நிலைய காவலர்கள், ஊருக்கு செல்ல பதிவு செய்த அனைவருக்கும் அதற்கான ஏற்பாடுகள் நடந்துவருவதாக கூறினார்கள். இதையடுத்து அவர்கள் அப்பகுதியிலிருந்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: வடமாநிலத் தொழிலாளர்கள் 90 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு!