சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. உள்ளிட்ட சட்டங்களை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள், மாணவர்கள், அரசியல் கட்சியினர் எனப் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இன்று காலை திருப்பூர் மாவட்டம் பல்லடம் சாலையில் சுமார் 400 பெண்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியாகச் சென்றனர்.
இந்தப் பேரணி காதர் சலீமா திருமண மண்டபம் முன்பு தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது. இதில், பெண்கள் கையில் தேசிய கொடியுடன் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: