பல்லடம் அருகே புள்ளியப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர், அன்னபூரணி. இவருக்கு சரண்யா (12) மற்றும் தேவி(19) என்று இருமகள்கள் உள்ளனர். இதற்கிடையில் நேற்று(அக்.06) தேவியின் கணவர் சேதுபதி, அன்னபூரணி, சரண்யா ஆகியோர் பொங்கலூர் பி.ஏ.பி வாய்க்காலுக்கு குளிக்கச்சென்றனர். அங்கு அன்னபூரணி கரையில் அமர, மற்ற அனைவரும் குளித்துள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக சரண்யா தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த தேவி, உடனே தனது கணவருடன் சென்று அவரைக் காப்பாற்ற முயன்றார். இதைத்தொடர்ந்து கணவனும், மனைவியும் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காமநாயக்கன்பாளையம் காவல் துறையினர் மற்றும் பல்லடம் தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் மூவரையும் தீவிரமாகத் தேடினர்.
மேலும் நேற்றிரவு (அக்.07) தேடும் பணியில் சுணக்கம் ஏற்பட்டதால் இன்று(அக்.07) இரண்டாவது நாளாக மாயமான மூன்று பேரை தேடும் பணியில் காவல் துறையினர் மற்றும் மீட்புப்படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: லஞ்சம் வாங்கிய விஏஓ: முற்றுகையிட்ட மக்கள்