ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த திங்களூரைச் சேர்ந்தவர் முத்துராஜா(26), இவரது மனைவி கிருபா (24). தம்பதி இருவர், கிருபாவின் தங்கை பிரியா (17) ஆகிய 3 பேரும் திருப்பூரிலிருந்து தஞ்சாவூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
காங்கயம்- திருச்சி சாலையில் இவர்கள் சென்று கொண்டிருக்கும் போது, திருச்சியிலிருந்து சிமெண்ட் ஏற்றிவந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற முத்துராஜா, கிருபா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் பலத்த காயமடைந்த பிரியாவை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காங்கயம் காவல்துறையினர், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவான லாரி ஓட்டுநர் அண்ணாமலை என்பவரைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:பட்டப்பகலில் ரவுடி வெட்டிக் கொலை: 4 பேர் கைது!