ETV Bharat / state

ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை திமுகவினர் அபகரிக்க முயற்சி: வி.ஏ.ஓ. உள்பட 15 பேர் மீது புகார் - thirupur crime news

திருப்பூர்: சூரிபாளையத்தில் தனது தாயார் மருத்துவச் செலவிற்காக ஒருவர், நிலப்பத்திரத்தை வைத்து ரூ. 5 ஆயிரம் கடன்பெற்ற நிலையில், தற்போது போலி பத்திரம் மூலமாக ரூ. 1.50 கோடி மதிப்பிலான அவரது நிலத்தை அபகரிக்க முயல்வதாக 15 பேர் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்
திருப்பூர்
author img

By

Published : Jan 20, 2020, 5:28 PM IST

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த சூரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சென்னியப்பன். இவருக்குச் சொந்தமாக ரூ. 1.50 கோடி மதிப்பிலான ஒரு ஏக்கர் 600 சென்ட் நிலம் உள்ளது. இவர் 2009ஆம் ஆண்டு, தாயார் மருத்துவச் செலவிற்காக சந்திரசேகர் என்பவரிடம் ஐந்தாயிரம் ரூபாய் கடன் பெற்றுக் கொண்டு தனது நிலப்பத்திரத்தை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர் கடன் வாங்கிய பணத்தை திரும்பக் கொடுத்து நிலப்பத்திரத்தை கேட்டபொழுது பத்திரத்தை கொடுக்காமல் போலி பத்திரங்கள் தயார்செய்து நிலத்தை கிரையம் செய்துகொண்டதாகக் கூறியுள்ளனர். இதையடுத்து, தற்போது கோவை, திருப்பூரைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட 15 பேர் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட சென்னியப்பன் புகார் மனு அளித்துள்ளார்.

ரூ. 1.50 கோடி நிலத்தை அபகரிக்க முயற்சி

இதுகுறித்து சென்னியப்பன் கூறுகையில், "இதுபோல பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலி பத்திரம் தயார்செய்தவர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னை மிரட்டுகிறார்கள்" என்றார்.

இதையும் படிங்க: சொந்த வாகனங்களை வாடகைக்கு ஓட்டுவதைத் தடுக்கக்கோரி மனு

Intro:தாயார் மருத்துவ செலவிற்கு ஐந்தாயிரம் கடன்பெற்ற நிலையில் போலி பத்திரம் தயார் செய்து 1.50 கோடி நிலத்தை அபகரிக்க முயல்வதாக கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட 15 பேர் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்.Body:திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த சூரி பாளையம் பகுதியை சேர்ந்தவர் சென்னியப்பன். அதே பகுதியில் இவருக்கு சொந்தமான 1.50 கோடி மதிப்புள்ள ஒரு ஏக்கர் அறுநூறு சென்ட் நிலம் உள்ளது. இந்நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு இவரது தாயார் மருத்துவ செலவிற்காக சந்திரசேகர் என்பவரிடம் ஐந்தாயிரம் ரூபாய் கடன் பெற்றுக் கொண்டு தனது நிலப்பத்திரத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. மீண்டும் பணத்தைத் திரும்பக் கொடுத்து தனது நிலப்பத்திரத்தை கேட்டபொழுது பத்திரத்தை தராமல் ஏமாற்றி போலி பத்திரங்கள் தயார் செய்து நிலத்தை கிரையம் செய்து கொண்டதாக கோவை மற்றும் திருப்பூர் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட 15 பேர் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட சென்னியப்பன் புகார் மனு அளித்துள்ளார். இது போல பலமுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் போலி பத்திரம் தயார் செய்தவர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னை மிரட்டுவதாகவும் தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.