காங்கேயம் திருப்பூர் சாலையில் சென்னியப்ப தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே வணிகவரித் துறை அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகம் முன்பு மரத்தின் அருகே ஒரு சிட்டுக்குருவி இறந்து கிடந்தது. இறந்த சிட்டுக்குருவியை தேடி அதன் இணை சிட்டுக்குருவியும், அந்த இடத்திற்கு வந்தது. தனது இணை சிட்டுக்குருவி இறந்ததுகூட தெரியாமல் எப்படியாவது அதன் உயிரை காப்பாற்றி விடலாம் என்று அந்த சிட்டுக்குருவி இரண்டு மணிநேரம் அதனை தன் அலகால் கொத்தி இழுப்பதும், புரட்டி போடுவதாகவும் போராடிய காட்சிகள் பார்ப்பவர்களை கலங்க வைத்தது.
இதையும் படிங்க: உரிமையாளர் இறந்தது தெரியாமல் 3 மாதங்கள் மருத்துவமனையில் காத்திருந்த நாய்!