ETV Bharat / state

கழிவறை சுத்தம்செய்ய சொல்லி மாணவர்களைக் சாதியின் பெயரில் திட்டிய தலைமையாசிரியை கைது - Teacher arrested for insulting school students for using abusing words

பள்ளி மாணவர்களைக் கழிவறையைச் சுத்தம் செய்யச் சொல்லி சாதியின் பெயரைச் சொல்லித் திட்டிய தலைமையாசிரியை காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.

பள்ளி மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய சொல்லி சாதியின் பெயரை சொல்லி திட்டிய ஆசிரியர் கைது...

author img

By

Published : Jan 20, 2022, 7:39 AM IST

திருப்பூர் மாவட்ட இடுவாய் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்துவருகின்றனர். இந்தப் பள்ளியில் மாணவர்களைக் கழிவறை சுத்தம்செய்ய வற்புறுத்தி தலைமையாசிரியை சாதியின் பெயரைச் சொல்லித் திட்டியதாகக் கடந்த டிசம்பர் மாதம் புகார் எழுந்தது.

இந்தப் புகாரின் அடிப்படையில் திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து, இந்த ஆய்வின் அடிப்படையில் பள்ளியின் தலைமையாசிரியை கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

கீதா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்
ஆசிரியை கீதா கைது

இதனையடுத்து, இந்த வழக்கில் கைதுசெய்யப்படாமல் இருப்பதற்காக கீதா சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்பிணை மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் நேற்று (ஜனவரி 19) இவரது முன்பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கீதா காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.

இடுவாய் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி

இதையும் படிங்க: சட்டக் கல்லூரி மாணவர் மீது தாக்குதல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.