திருப்பூர் மாவட்டத்தில் 43 நாள்களுக்குப் பிறகு இன்று மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவிற்கு இணங்க மதுப்பிரியர்கள் குடையுடன் மதுபானக் கடைகள் முன்பு குவிந்து வருகின்றனர். மதுப்பிரியர்களுக்காக புதிதாக குடைக் கடைகளும், முகக்கவச விற்பனையாளர்களும் அதிகரித்துள்ளனர்.
இதனிடையே திருப்பூர் மாவட்டத்திலுள்ள எம்.எஸ். நகர் பகுதியில் மதுக்கடை திறக்கப்பட்டபோது, அங்கிருந்த குடிமகன்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடியுள்ளனர். இதையறிந்த வடக்கு காவல் நிலைய காவல் துறையினர், கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: 'கணவர்களுக்காக ஒயின் வாங்க வந்தோம்!' - டெல்லி பெண்கள்