திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள பெதப்பம்பட்டியில் கறவைப்பசுக்கள் வைத்திருப்பவர்களுக்கு, கால்நடைகளுக்குத் தேவையான தீவனப்புல் நறுக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. கால்நடைத்துறை சார்பில் வழங்கப்படும் இந்த இயந்திரங்களை, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனும், மாவட்ட ஆட்சியர் பழனிசாமியும் இணைந்து வழங்கினார்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 74 பயனாளிகளுக்கு, 23 ஆயிரம் மதிப்பிலான இந்த இயந்திரங்களும், 15,000 ரூபாய் மதிப்பிலான மானியத் தொகையும் அரசு சார்பில் வழங்கப்பட்டன.
இந்தத் தீவனப்புல் நறுக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்தும்போது தீவனங்கள் விரையமாவது குறைவதால், தீவனச்செலவுகள், வேலைப்பளு ஆகியவைக் குறைவதோடு, பசுவின் செரிமானத் தன்மை அதிகரித்து பால் உற்பத்தியும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.