மாநில அளவிலான கராத்தே போட்டிகள் திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடந்தது. INOUK-HA-SHITORYU-KERISHINKAI-KARATE-DO-INDIA என்ற அமைப்பு இந்த போட்டியை நடத்தியது. இந்தப் போட்டியில் கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்துக் கொண்டனர்.
இதில் 5 வயது முதல் 15 வயது வரையிலான மாணவ- மாணவிகளுக்குக் கட்டா, குமுத்தே ஆகிய இரண்டு பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது.
போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ- மாணவிகளுக்குப் பதக்கங்கள், கேடயங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
பள்ளிகளில் இதுபோன்ற தற்காப்புக் கலைகள் கற்பதன் மூலம் மாணவர்களுக்கு பயத்தைப் போக்கி தைரியத்தை அளிக்க முடியும். இது போன்ற தற்காப்புக் கலைகளை கற்பதற்கு குழந்தைகள் ஆர்வமாக இருக்கின்றனர் என்பதற்கு இந்த கராத்தே போட்டி ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.