சுமார் 360 ஆண்டுகளுக்குப் பின்பு சூரிய கிரகணம் தமிழ்நாட்டின் மேற்கு மண்டலங்களில் தெளிவாகத் தெரியும் என அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.
இதனடிப்படையில் திருப்பூர், கோவை, கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு அறிவியல் இயக்கத்தினர் சூரிய கிரகணத்தை பார்க்க பல்வேறு ஏற்பாடுகள் செய்திருந்தனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினரும், அதேபோல் திருப்பூர் கல்லூரி சாலைப் பகுதியில் தமிழ்நாடு வானியல் சமூகம் சார்பிலும் டெலஸ்கோப், பைனாகுலர் உள்ளிட்டவைகளோடு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஆனால், காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் இருந்த காரணத்தால் சூரிய கிரகணத்தைப் பார்ப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் சூரிய கிரகணத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருந்த மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மேகமூட்டம் காரணமாக இந்த முறை சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியவில்லை எனவும், அடுத்து வருகின்ற சூரிய கிரகணம் ஹரியானாவில் பார்க்க முடியும் எனவும் தமிழ்நாடு வானியல் சமூகத்தின் தலைவர் வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.
இதையும் படிங்க:
வானை இருளச் செய்த சூரிய கிரகணம் முடிந்தது - கண்டு ரசித்த திண்டுக்கல் மக்கள்