திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 'கோபுரம் சீட்ஸ் பிரைவேட்ட லிமிடெட்' என்ற தனியார் சீட்டு கம்பெனி கடந்த சில ஆண்டுகளாகச் செயல்பட்டுவருகிறது. இந்த கம்பெனியைச் சேர்ந்தவர்கள் தாராபுரம், மூலனூர், மடத்துக்குளம், கடத்தூர், குண்டடம் உள்ளிட்ட பகுதிகளில் மாதாந்திர சீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தினர்.
அதன்கீழ் ஆயிரக்கணக்கான மக்கள் சீட்டுத் தொகையை கட்டிவந்துள்ளனர். தற்போது அதன் அலுவலர்கள் சிலருக்கு சீட்டு விழுந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் அவர்களுக்கு 30 நாள்கள் கடந்தும் பணத்தைத் திருப்பி தராமல் ஏமாற்றிவந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த வாடிக்கையாளர்கள் தனியார் சீட்டு கம்பெனியை முற்றுகையிட்டனர்.
இதனால் அதன் அலுவலர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு மாலை பணத்தை திருப்பி தருவதாக கூறிய அலுவலர்கள் கம்பெனியை மூடிவிட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: சீட்டு பணம் மோசடி - காவல் ஆணையர் அலுவலகம் முன்பு மூதாட்டி நூதன போராட்டம்