திருப்பூர் மாவட்டம் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த குணசேகரன் என்பவர் போட்டியிடுகிறார். நேற்று வில், அம்பு ஏந்தி கழுத்தில் நூல்கண்டு மாலை அணிந்து ஊர்வலமாக வந்த அவர் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
நூல் விலை உயர்வு காரணமாக, பின்னலாடை தொழில் நலிவடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே, இவ்வாறு வந்ததாக அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அடுத்தடுத்து 3 சிறுத்தைக் குட்டிகள் உயிரிழப்பு - வனத் துறை தீவிர விசாரணை!