திருப்பூரில் கல்வி சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து கோரிக்கை மனுவை அம்மாவட்ட ஆட்சியரிடம் இந்திய மாணவர் சங்கத்தினர் கொடுத்தனர்.
ஊரடங்கு பிரச்னை முடிவதற்குள் தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களை தடுத்து நிறுத்த வேண்டும். இணையதள வசதி அனைத்து மாணவர்களுக்கும் கிடைத்த பிறகே இணைய வழியில் பாடம் நடத்தவேண்டும். பள்ளிகள் திறப்பு, கற்றல், கற்பித்தல் குறித்தான தமிழ்நாடு அரசின் ஆய்வுக் குழுவில் மாணவர்கள் கல்வியாளர்கள், மாணவர் அமைப்பு பிரதிநிதிகள் இனைத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மனுவைக் கொடுத்து பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம்
அதேபோல் சேலத்தில் அரசு கல்லூரிகளில் சுழற்சி முறை ரத்து செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி. கண்ணன் தலைமையில் அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து கண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”உயர் கல்வித்துறை அமைச்சர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் இருவரும் மாணவர்கள் நலனில் அக்கறை இல்லாதத்தனமாக அவர்களின் செயல்பாடுகள் இருக்கிறது. தொடர்ந்து தமிழ்நாட்டில் தற்போது கல்லூரிகளில் நடைமுறையில் உள்ள சுழற்சி முறையை ரத்து செய்யக்கூடாது.
பொதுமுடக்கம் அமலில் உள்ள சூழ்நிலையில் கல்வி கட்டணங்களை தனியார் கல்வி நிறுவனங்கள் வசூலிக்கின்றன. கடந்த மாதமே பெரும்பாலான தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் கல்விக் கட்டணங்களை வசூலிக்க தொடங்கிவிட்டது. எனவே பள்ளிகள் தொடங்கி மூன்று மாதங்களான பிறகே கல்வி கட்டணங்களை வசூலிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் " என்றார்.
இதையும் படிங்க: இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது - விவசாய தொழிலாளர் சங்கம்