திருப்பூர் மாவட்டம் அருகே உள்ள திருமுருகன்பூண்டியில் அறநிலையத் துறை மற்றும் தொல்லியல் துறைக்குச் சொந்தமான திருமுருகநாத சுவாமி திருக்கோயில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கோயிலின் பக்கவாட்டுச் சுவரில் துளையிட்டு உள்ளே சென்றுள்ளனர்.
காலை கோயிலுக்குள் சென்ற போது கோயிலின் அன்னதான உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததாகவும்; அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலையடுத்து விரைந்து வந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், அறநிலைத் துறையினர், '' கோயில் சுவர் துளையிடப்பட்டது உண்மை. ஆனால் உண்டியலில் இருந்த பணம், நகை எதுவும் கொள்ளை போகவில்லை'' எனத் தெரிவித்துள்ளனர். ஆனால், கோயிலில் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பது போன்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. முருகன்கோயிலில் நடைபெற்ற இந்தக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:
''நான் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றிபெறுவேன்''- லலிதா ஜுவல்லரி கொள்ளையன் முருகன்!