ETV Bharat / state

மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி...

திருப்பூர்: மின்சாரம் தாக்கி கட்டட தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் திருப்பூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உறவினர்கள் சாலை மறியல்
author img

By

Published : Aug 7, 2019, 7:01 PM IST

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த கண்ணமநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார்(25). இவர் பொள்ளாச்சி சாலையில் ஜாஹிர் உசேன் என்பவர் புதியதாக கட்டிவரும் கடைக்கு கான்ரிக்ட் போடுவதற்காக வேலைக்கு சென்றுள்ளார். வழக்கம் போல் கட்டிட தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது மாடிக்கு கலவை கொண்டு செல்ல பயன்படுத்திய வாளியை செல்வகுமார் தொட்டுள்ளார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்தில் செல்வகுமார் பரிதாபமாக உயிரழந்தார்.

இது குறித்து, கட்டட உரிமையாளர், பொறியாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இருப்பினும் இருவரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, கட்டட வேலைகள் நடைப்பெற்றுகொண்டு இருந்த தருவாயில் மின்சார ஒயர்களை முறையாக பராமரிக்கமால் அலட்சியமாக விட்டதால்தான் உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே கட்டட உரிமையாளர், பொறியாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செல்வகுமாரின் உறவினர்கள் கோவை திண்டுக்கல் சாலையில் தீடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி

இது குறித்து, தகவலறிந்து வந்த காவலதுறையினர் உரிய நடவடிக்கை எடுக்கபடும் என உறுதியளித்த பின் உறவினர்கள் மறியலை கைவிட்டனர். பின்னர், செல்வகுமாரின் உடல் அரசு மருத்துவணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Intro:Body:உடுமலையில் கட்டிட தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிர்இழப்பு.

கட்டிட உரிமையாளர் மற்றும் பொறியாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோவை -திண்டுக்கல் தேசிய நெடுஞ் சாலையில் மறியல்

போராட்டத்தில் 1மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த கண்ணமநாயக்கனூர் கிராமத்தில் வசித்து வந்த செல்வகுமார்(25)என்பவர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் பொள்ளாச்சி சாலையில் ஜாஹிர்உசேன் என்பவர் புதியதாக கட்டிவரும் கடைக்கு மேல் கான்ரிக்ட் போடுவதற்காக வேலைக்கு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வழக்கம் போல் கட்டிட தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்த நேரத்தில் எதிர்பாரத விதமாக இரண்டாவது மாடிக்கு கலவை கொண்டு செல்வ பயன்படுத்திய வாளியை செல்வகுமார் தொட்டவுடன் மின்சாரம் அடித்து தூக்கி விசியதாக தெரிகிறது.இதில் சம்பவ இடத்தில் செல்வகுமார் பரிதாபமாக உயிர் இழந்தார்.சம்பவம் மாலை 4மணிக்கு நடந்தும் கட்டிட உரிமையாளர் மற்றும் பொறியாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என கூறப்படுகிறது.மேலும் கட்டிட வேலைகள் நடைப்பெற்று கொண்டு இருந்த தரூவாயில் மின்சார ஓயர்களை முறையாக பராமரிக்கமால் அலட்சியாக விட்டதால் தான் உயிர் இழப்பு ஏற்பட்டு உள்ளது .ஆகையால் உயிர் இழப்பு நடந்தும் சம்பவ இடத்திற்கு வராமால் இருக்கும் கட்டிட உரிமையாளர் மற்றும் பொறியாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இறந்து போன செல்வகுமாரின் உறவினர்கள் கோவை திண்டுக்கல் சாலையில் மறியல் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கபடும் என உறுதி அளித்ததன் பேரில் சாலைமறியல் போராட்டம் மணிக்கு முடிவு வந்ததது.இதற்கிடையில் சாலைமறியல் போரட்டத்தால் கோவை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில்
சுமார் 1மணி நேரம் கடுமையாக போக்குவரத்து பாதிக்கபட்டது.

உயிர் இழந்த செல்வகுமார் உடல் பிரேத பரிசோதணக்காக உடுமலை அரசு மருத்துவணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.