திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட எஸ்.வி. காலனி பகுதியில் பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அப்பகுதி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டு அடைக்கப்பட்டது.
இந்நிலையில் அப்பகுதி கடந்த ஒரு வார காலமாக கட்டுப்படுத்தபட்ட பகுதியாக இருப்பதால் அங்குள்ளவர்கள் சரிவர வேலைக்கு சென்று வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் அங்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உதவிகள் செய்வதாக தெரிவித்திருந்த நிலையில், இதுவரை எந்த உதவிகளும் செய்து கொடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
மேலும், இப்பகுதியில் உடனடியாக மாவட்ட நிர்வாகம் அத்தியாவசிய உதவிகள் செய்து தரவேண்டும் இல்லையென்றால், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியை திறந்துவிட கோரி கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: குருவி கூட்டை கலைக்க மனமில்லை: கும்மிருட்டில் வாழும் கிராம மக்கள்!