திருப்பூர் மாவட்டம் 57ஆவது வார்டு மையப்பகுதியான முருகம்பாளையம் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றனர். இப்பகுதியில் 4 கோயில்கள், 4 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன.
இந்நிலையில் ஊரின் மையப்பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் மதுபானக் கடை அமைப்பதற்கு நிர்வாகம் முனைப்புக் காட்டிவருகின்றனர். ஏற்கனவே இப்பகுதியில் மூன்று மதுபானக்கடைகள் செயல்பட்டுவருவதால் புதிதாக ஒரு மதுபானக் கடை அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் கோயில்கள், பள்ளிகள் அமைந்துள்ள இப்பகுதியில் டாஸ்மாக் கடையை அமைத்தால், குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலை உருவாக நேரிடும். எனவே பொதுமக்களைப் பாதுகாக்கும் விதமாக இப்பகுதியில் மதுபானக் கடை அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதையும் படிங்க: தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கு: காவல் ஆய்வாளரை கைது செய்ய கோரிக்கை