திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் அமைந்துள்ள நேதாஜி விளையாட்டு மைதானம் அருகே உள்ள குப்பைத்தொட்டிகளை நகராட்சி அதிகாரிகள் சரியாக பராமரிக்காத காரணத்தால் அங்கு சுகாதாரமற்ற நிலை நிலவுகிறது.
குவிந்து கிடக்கும் இந்த குப்பைகளால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அங்குள்ள மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். குப்பைத் தொட்டி நிரம்பி சாலையிலும் குப்பை சேர்ந்துள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.