ETV Bharat / state

சொத்து தகராறில் தந்தை அடித்துக் கொலை; மகன் தலைமறைவு! - தந்தை அடித்துக் கொலை; மகன் தலைமறைவு

திருப்பூர்: உடுமலை அருகே சொத்து தகராறில் தந்தையை அடித்துக் கொலை செய்துவிட்டு தலைமறைவான மகனை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

property issue son killed father and abscond in thiruppur district
author img

By

Published : Sep 30, 2019, 10:31 PM IST

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேவுள்ள கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த விவசாயி கோதண்டசாமி (65). இவருக்கு சக்திவேல் குமார்(22) என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில மாதங்களாகவே கோதண்டசாமியிடம் சக்திவேல் சொத்தை தனது பெயருக்கு எழுதித்தருமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டுவந்ததாகவும், கோதண்டசாமி தொடர்ந்து இதற்கு மறுத்துவந்ததாகவும் தெரிகிறது.

இன்று வழக்கம்போல இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த சக்திவேல் அருகில் கிடந்த தடியை எடுத்து கோதண்டசாமி தலையின் பின்புறத்தில் தாறுமாறாக அடித்துள்ளார். இதனால் நிலைகுலைந்த கோதண்டசாமி அலறிக்கொண்டே ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து உயிரிழந்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு விரைந்த அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவலளித்தனர். இதையறிந்த சக்திவேல் காவல் துறையினரிடமிருந்து தப்பிக்க தலைமறைவாகியுள்ளார்.

பின்னர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கோதண்டசாமியின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், தலைமறைவாகியுள்ள சக்திவேல் குமாரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Intro:Body:உடுமலை அருகே சொத்து தகராறில் தந்தை அடித்துக் கொலை.

மகன் தலைமறைவு.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஜே.என் பாளையத்திற்கு உட்பட்ட கிருஷ்ணா புரத்தை சேர்ந்தவர் கோதண்டசாமி(65). விவசாயி. இவருக்கு சக்திவேல் குமார்(22) என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக கோதண்டசாமியிடம் அவரது மகன் சக்திவேல் குமார் சொத்தை எழுதிக்கேட்டு பிரச்சனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கோதண்டசாமி தனது மகனுக்கு சொத்தை எழுதி தராமல் தொடர்ந்து மறுத்து வந்ததாக தெரிகிறது .

இந்த நிலையில் இன்று சக்திவேல் குமார் தனது தந்தையிடம் சென்று சொத்தை தனது பெயருக்கு எழுதி வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு கோதண்டசாமி மறுத்துவிட்டார். இதனால் தந்தைக்கும் மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சக்திவேல்குமார் அருகில் கிடந்த தடியை எடுத்து தந்தையின் பின்புற தலையில் தாறுமாறாக அடித்துள்ளார். இதனால் நிலைகுலைந்த கோதண்டசாமி அலறிக்கொண்டே ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் கோதண்டசாமி வீட்டிற்கு வந்தனர். ஆனால் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த தளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அதற்குள்ளாக சக்திவேல் குமார் தலைமறைவாகிவிட்டார். அதைத்தொடர்ந்து போலீசார் கோதண்டசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் .மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சக்திவேல் குமாரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

சொத்துத் தகராறில் தந்தையை மகன் அடித்துக் கொன்ற சம்பவம் தளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.