சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் - அவினாசி சாலையில் உள்ள எஸ்ஏபி சிக்னல் அருகே வாகனச் சோதனை நடைபெற்றது.
அப்போது, அந்த வழியாக வந்த ஈச்சர் ரக டெம்போவை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்ததில், உரிய ஆவணங்களின்றி 252 அரிசி மூட்டைகள் கொண்டு வரப்பட்டது கண்டறியப்பட்டது.
பின்னர் வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில், பொல்லிக்காளிபாளையம் விஜயகுமார் அரிசி ஆலையிலிருந்து 2.40 லட்சம் ரூபாய் மதிப்பிலான 445 அரிசி மூட்டைகள் எடுத்து வரப்பட்டதும் அவைகளில் விநியோகம் செய்தது போக 252 அரிசி மூட்டைகள் இருப்பதும் தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து அரசி மூட்டைகளோடு டெம்போவையும் சேர்த்து பறிமுதல் செய்த பறக்கும் படையினர் திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அவற்றை ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க...திமுக தேர்தல் அறிக்கை 2021 “இயற்கை வேளாண்மைக்கு தனிப்பிரிவு”