திருப்பூர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மகாதேவன். மாற்றுத்திறனாளியான இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது குடும்ப பிழைப்பிற்காக தையல் மிஷின் வேண்டி விண்ணப்பித்திருந்தார்.
இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை தையல் மிஷின் கேட்டு மாற்றுத்திறனாளி அலுவலகத்துக்கு வந்தபோது இரண்டு கால்களும் இழந்த தன்னை தையல்மிஷினை மிதிக்கச் சொல்லி அலுவலர்கள் வற்புறுத்தியதாகவும், குடும்ப பிழைப்பிற்காக தையல்மிஷின் கிடைத்தால் எனது மனைவி இதனை உபயோகித்து குடும்பத்தை நடத்துவார் என்றும் அலுவலர்களிடம் கூறியும், கேட்காமல் தன்னை வற்புறுத்தினார்கள் என்று மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயனிடம் புகார் அளித்தார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்ததைத் தொடர்ந்து விரைவில் தையல் மிஷின் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வங்கியில் கடன் தராததால் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி!