தமிழ்நாடு அரசு 34 வகையான தொழில்களை அனுமதித்தும், தனிக் கடைகளை திறக்க அனுமதி வழங்கியும் உத்தரவிட்டுள்ள நிலையில், சிகை திருத்தும் கடைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
ஊரடங்கு தொடங்கியதிலிருந்து, 50 நாட்களாக சவரத்தொழிலாளர்கள் கடையைத் திறக்காமல், ஊரடங்கைப் பின்பற்றி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் சவரத்தொழில்களுக்கு மட்டும் தடை நீடிப்பதால், திருப்பூர் மாநகரத்தில் 3 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து சிகை திருத்தும் தொழிலாளிகள் வேதனை தெரிவித்ததோடு, தங்களின் கடைகளைத் திறக்க அனுமதி கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனுவும் அளித்தனர்.
தமிழ்நாடு சவரத் தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அளித்த அம்மனுவில், சிகை திருத்தும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கக் கோரியுள்ளனர்.
இதையும் படிங்க: குளு குளு காற்று....கொட்டி தீர்த்த மழை: குதூகலத்தில் விழுப்புரம் மக்கள்!