ETV Bharat / state

மதுபானக் கடைகள் திறப்பு: தர்ணாவில் நாடாளுமன்ற உறுப்பினர்! - Opening of liquor stores in Tirupur

திருப்பூர்: மதுபானக் கடைகள் திறக்கப்பட்டதை எதிர்த்து, திருப்பூரில் நாடாளுமன்ற உறுப்பினர் கருப்பு சட்டை அணிந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தர்ணாவில் நாடாளுமன்ற உறுப்பினர்
தர்ணாவில் நாடாளுமன்ற உறுப்பினர்
author img

By

Published : May 8, 2020, 9:44 AM IST

தமிழ்நாடு முழுவதும் அரசு மதுபானக் கடைகள் நேற்று முதல் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்ததை அடுத்து, திருப்பூர் மாவட்டம் முழுவதும் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில் ஊரடங்கு முடிவதற்கு முன்பாக மதுபானக் கடைகள் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து, திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் கருப்பு சட்டை அணிந்து, பதாகைகளை ஏந்தியவாறு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் .

இப்போராட்டத்தில் திமுக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: 'அமைச்சர்கள் கமிஷன் பெறவே டாஸ்மாக் திறக்கப்பட்டுள்ளது' - முத்தரசன் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.