ETV Bharat / state

அடைமான நிலம் ஆக்கிரமிரப்பு: ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்கு முற்சித்த பெண்!

திருப்பூர்: அடைமானம் வைத்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்தது மட்டுமின்றி, அடியாள்களுடன் வந்து மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Occupation of mortgaged land; The woman who set fire to the collector's office!

author img

By

Published : Sep 30, 2020, 9:30 PM IST

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவர் தனது குடும்பத்துடன் பின்னலாடை சார்ந்த நிறுவனம் நடத்திவருகிறார். இதற்காக கடந்த 2015ஆம் வருடம் முத்துசாமி என்பவரிடம் தனக்குச் சொந்தமான 760 சதுர அடி நிலத்தை அடைமானம் வைத்து, மூன்று லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.

கடன் பெற்றது முதல், முறையாக தவணைத் தொகை செலுத்திவந்துள்ளார். இந்நிலையில் கரோனா ஊரடங்கின் காரணமாக லட்சுமியால் கடன் தவணையை செலுத்த முடியாமல் இருந்துள்ளார். இதனால் முத்துசாமி, தனது அடியாள்களுடன் வந்து மிரட்டியதாகக் கூறப்படுகிறது. மேலும் அடைமானமாக வைத்த நிலத்தை வேறு ஒருவருக்கு விற்கப்போவதாகவும் மிரட்டியுள்ளனர்.

இது குறித்து லட்சமி பெருமாநல்லூர் காவல்நிலையத்தில் புகாரளித்தும், காவல் துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர். இதனால் மனமுடைந்த லட்சுமி, இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்.

இதையடுத்து உடனடியாக பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். இச்சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:சிசிடிவி காட்சியில் சிக்கிய பைக் கொள்ளையர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.