மேற்கு தொடர்ச்சி மலை, சிறுவாணி நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக திருப்பூர் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நொய்யல் ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நொய்யல் ஆற்றின் கரையோரப் பகுதிகளான பெத்திசெட்டிபுரம், அணைமேடு பகுதிகளில் வசிக்கும் குடும்பத்தினரை அதிக கவனத்துடன் இருக்க அலுவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதேபோல ஜம்மனை ஓடை, சங்கிலிப்பள்ளம் ஓடை ஆகிய ஓடைகளின் கரையோரம் குடியிருக்கும் மக்களுக்கும் அலுவலர்கள் வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
முன்னதாக, திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருமூர்த்தி அணை, அமராவதி அணைகளில் வெள்ளம் நீர்வரத்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.