ETV Bharat / state

சொந்த ஊர் செல்ல வடமாநிலத் தொழிலாளர்கள் போராட்டம் - திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட வடமாநிலத்தவர்கள்

திருப்பூர்: சொந்த ஊர் செல்ல அனுமதிக்க வேண்டி வடமாநிலத் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

north state workers
north state workers
author img

By

Published : May 3, 2020, 9:53 AM IST

கரேனா பெருந்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் அதனைத் தடுக்கும்வகையில் மத்திய அரசு மே 17ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளது. இதனால், அனைத்துவிதமான போக்குவரத்துச் சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்படுவதால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தினக்கூலிகள், முறைசாரா தொழிலாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது போதிய உணவு, இருக்க இருப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் வெளிமாநிலத் தொழிலாளர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர். இதனையடுத்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அவர்களுக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. இருப்பினும் பெரும்பாலான வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவிவருகிறது.

இதன் காரணமாக பலர் தங்கள் மாநிலங்களுக்கு நடந்தே செல்லும் அவலமும் அரங்கேறிய வண்ணம் உள்ளது. இதனிடையே மத்திய அரசு வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல விரும்பினால் தேவையான ஏற்பாடுகளை மாநில, மாவட்ட நிர்வாகம் செய்துதர வேண்டுமென அறிவித்தது.

இதன் தொடர்ச்சியாக இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட வெளிமாநிலத் தொழிலாளர்கள், தங்களது சொந்த ஊருக்குச் செல்ல உரிய ஏற்பாடுகள் செய்து தரக்கோரி விண்ணப்பித்தனர்.

ஆனால், அவர்களைச் சொந்த ஊருக்கு அனுப்புவதில் நடைமுறைச் சிக்கல் இருப்பதாக அலுவலர்கள் தெரிவித்தனர். இதனால் வடமாநில இளைஞர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநிலத் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோகச் செய்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்

இது குறித்து, அரசு அலுவலர்கள் கூறுகையில், "வெளிமாநிலத்தவர்களை, அவர்களது சொந்த ஊருக்கு அனுப்புவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இங்கிருந்து அவர்களை அனுப்ப நடவடிக்கை எடுத்தாலும் அந்த மாநிலத்தைச் சேர்ந்த அலுவலர்கள் அனுமதி வழங்க வேண்டும்.

அவ்வாறு அனுமதி வழங்கப்பட்ட பின்னர்தான் இவர்களை அனுப்பிவைக்க முடியும். வெளிமாநிலத்தவர்கள் எண்ணிக்கை கணக்கிடப்பட்டுவருகிறது" என்றனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நடந்த அமைச்சரவை கூட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.