ETV Bharat / state

திருப்பூரில் வடமாநில பெண் மர்ம மரணம்.. போலீசார் விசாரணை! - etv news

Tirupur Police: திருப்பூர் அருகே சுடுகாட்டில் மர்மமான முறையில் இறந்துக்கிடந்த வடமாநிலப் பெண்ணின் உடலை மீட்ட போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

north state lady dead body recovered in tirupur
திருப்பூர் அருகே வடமாநிலப் பெண் சடலமாக மீட்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2023, 12:02 PM IST

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே ராக்கியாபட்டி பகுதியில் உள்ள சுடுகாட்டில் (செப்.25) நேற்று காலை ரத்த காயங்களுடன் பெண் சடலம் இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற பெருமாநல்லூர் காவல்துறையினர் சடலமாக இருந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணையில்,"சடலமாக கிந்த பெண் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அந்த பெண் குறித்த வேறு எந்த தகவலும் தெரியாத நிலையில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் ஆகியோர் சம்பவ இடத்தில் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:காவிரி விவகாரம்: பெங்களுருவில் முழு கடையடைப்பு.. 430 தமிழக பேருந்துகள் நிறுத்தம்.. பயணிகள் அவதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.