ETV Bharat / state

15 ரூபாய்க்கு விற்கப்படும் போதை ஊசிகள்; தமிழ்நாட்டிற்குள் ஊடுருவிய போதை ஊசி கும்பல்! - drug injection for RS.15

திருப்பூர்: கிராமப்புற சிறுவர்களைக் குறிவைத்து குறைந்த பணத்தில் போதை மருந்துகளை விற்றுள்ள கும்பலை, ஒருமாதத்திற்குள் கைது செய்வோம் என தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

national-child-rights-protection-commissioner-anand-about-childrens-drug-usage
author img

By

Published : Oct 30, 2019, 5:36 PM IST

Updated : Oct 30, 2019, 8:02 PM IST

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சிறுவர்களுக்கு போதைப் பொருள்கள் விற்பனை செய்வதை தடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், சிறுவர்கள் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதையும் அவற்றைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கான யுக்திகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் கலந்துகொண்டார்.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுவர்களுக்கு போதை ஊசி விற்பனை செய்த 11 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அதில் ஐந்து பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாட்டிற்கு இந்த போதை ஊசிப் பழக்கம் என்பது முற்றிலும் புதியது. இந்த போதை ஊசி மருந்து திருப்பூரிலிருந்து சென்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மருந்துகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த மருந்துகள் உயிர் காப்பான் மருந்துகள் என்று அழைக்கப்பட்டாலும், போதைக்கு பயன்படுத்தும்போது உயிர்க்கொல்லும் மருந்தாக அமைகிறது. இந்த போதை ஊசியை உபயோகிப்பதனால் 24 மணி நேரமும் போதையில் இருக்கலாம்.

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையர் ஆனந்த் செய்தியாளர் சந்திப்பு

குழந்தைகளைக் குறிவைத்து குறைந்த விலையில் இந்த போதை மருந்துகளை விற்று வந்துள்ளனர். ரூ. 15 முதல் இந்த மருந்துகள் விற்பனையானது கண்டறியப்பட்டுள்ளது. இந்த போதை ஊசியை உபயோகிப்பதன் மூலம், சிறுமூளை அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகும். போதை மருந்து கும்பலை பிடிப்பது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இந்த போதை மருந்துகள் இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் எந்த வழியாக வந்தது என்பதை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். ஒருமாத காலத்திற்குள் தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்ற கும்பலைச் சேர்ந்தவர்கள் கண்டுபிடிக்கப்படுவார்கள்’’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: போதைப் பொருள்களுக்கு எதிராக நாடு முழுவதும் வேட்டை!

Intro:கிராம குழந்தைகளை குறிவைத்து குறைந்த பணத்தில் போதை மருந்துகளை விற்று உள்ள கும்பல் தமிழகத்தில் ஊடுறுவல் லட்சத்திற்கும் அதிகமாக போதை மருந்துகள் விற்பனை போதை ஊசி மருந்து திருப்பூரிலிருந்து சென்றுள்ளதாக அதிர்ச்சித் தகவல்.

Body:குழந்தைகள் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகளை தடுத்திட பயன்படுத்தும் உத்திகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்தது இதில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆர் ஜி ஆனந்த் கலந்து கொண்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் குழந்தைகள் போதை பொருட்களை பயன்படுத்துவதை எவ்வாறு தடுப்பது அதனை முற்றிலுமாக ஒழிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த்,
புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுவர்களுக்கு போதை ஊசி விற்பனை செய்த 11 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் இதில் 5 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது தமிழகத்திற்கு இந்த போதை ஊசி பழக்கம் என்பது புதியது இந்த போதை ஊசி மருந்து திருப்பூரிலிருந்து சென்றுள்ளது கண்டறியப்பட்டுள்ளது சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மருந்துகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது இந்த மருந்துகள் உயிர் காப்பான் மருந்துகள் என்று அழைக்கப்பட்டாலும் போதைக்கு பயன்படுத்தும் பொழுது உயிர் கொள்ளும் மருந்தாக அமைகிறது இந்த போதை ஊசியை உபயோகிப்பதனால் 24 மணி நேரமும் போதையில் இருக்கலாம் குழந்தைகளை குறிவைத்து குறைந்த பணத்தில் இந்த போதை மருந்துகளை விற்று வந்துள்ளனர் ரூபாய் 15 முதல் இந்த மருந்துகள் விற்பனையானது கண்டறியப்பட்டுள்ளது இந்த போதை ஊசியை உபயோகிப்பதன் மூலம் சிறு மூளை அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகும் என கண்டறியப்பட்டுள்ளது இந்த போதை மருந்து கும்பலை பிடிப்பது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இந்த போதை மருந்துகள் தமிழகத்திற்குள் எவ்வாறு வந்தது குறிப்பாக இந்தியாவிற்குள் எந்த வழியாக வந்தது என்பது குறித்து போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ஒரு மாத காலத்திற்குள் தமிழகத்தில் போதை பொருள் விற்ற கும்பல் கண்டுபிடிக்கப் படுவார்கள் இந்த போதை பொருள் இல்லாத தமிழகம் ஆக மாற்றப்படும் என தெரிவித்தார்.

Conclusion:
Last Updated : Oct 30, 2019, 8:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.