திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குள் கடந்த 7ஆம் தேதி நுழைந்த நபர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலைக் கொண்டு மருத்துவமனை வரவேற்பறையில் நின்றிருந்த பெண்ணின் கையை கிழித்துள்ளார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் இருந்த அப்பெண்ணின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் தாக்குதலில் ஈடுபட்டவரை விரட்டியதைத் தொடர்ந்து, அந்நபர் மருத்துவமனையிலிருந்து தப்பிச் சென்றார். இதனையடுத்து இதுகுறித்து காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் மருத்துவமனையில், பெண் கையை கிழித்த நபரைத் தேடி வந்தனர். விசாரணையில் அவர் பெயர் மனோகரன் என்று தெரியவந்தது.
தொடர்ந்து அந்த இளைஞரை திருமுருகன்பூண்டி காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். நான்கு நாள்களுக்கு முன்பு மருத்துவமனையில் கொலை வெறித்தாக்குதலில் ஈடுபட்ட அந்நபரின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: ராம்ராஜ் பெயரில் போலி முகக்கவசங்கள் தயாரிப்பு: மூவர் கைது!