திருப்பூர் மாநகராட்சி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், தினசரி சந்தை, டவுன்ஹால் மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் சீர்மிகு நகர் திட்டத்தின்கீழ் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதனை இன்று திருப்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் நேரில் ஆய்வுசெய்தார்.
அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஆகியோரிடம் கேட்டறிந்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "திருப்பூரின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு சீர்மிகு நகர் திட்டப்பணிகளில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தி அவற்றை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ள உள்ளோம்" எனத் தெரிவித்தார்.