ETV Bharat / state

செல்போன் டவர் விழுந்து இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழப்பு! - திருப்பூர் செல்போன் டவர் விபத்து

திருப்பூர்: பல்லடம் சாலையில் பராமரிக்கப்படாத செல்போன் டவர் சரிந்து சாலையில் விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் உயிரிழந்தார்.

cell-phone-tower-collapsed
cell-phone-tower-collapsed
author img

By

Published : Aug 4, 2020, 2:05 PM IST

திருப்பூர் பல்லடம் சாலை தமிழ்நாடு திரையரங்கம் அருகே பராமரிக்கப்படாத செல்போன் டவர் இன்று(ஆகஸ்ட் 4) திடீரென சாலையில் சரிந்து விழுந்தது. அதனால் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர், அதில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் விபத்தில் ஒரு காரும் சிக்கி சேதமடைந்தது.

தகவலறிந்த வீரபாண்டி காவல் துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சரிந்து விழுந்த செல்போன் டவரை அப்புறப்படுத்தினர்.

செல்போன் டவர் விழுந்து விபத்து

காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த செங்கிஸ்கான்(54) என்பது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பராமரிக்கப்படாத செல்போன் டவர்களை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

இதையும் படிங்க: பெட்ரோலுடன் செல்போன் டவரில் ஏறி தற்கொலை முயற்சி: இளைஞரால் பரபரப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.